"உடல் எடையை குறைச்சது இதுக்குத்தானா?" -சிசிடிவி கேமராவில் சிக்காமல் ஒரு வேலைக்காரன் என்ன செஞ்சார் பாருங்க .

 
atm theft


உடல் எடையை குறைத்து முதலாளி வீட்டில் இருந்து நகை பணத்தை கொள்ளையடித்த நபரை போலீஸ் கைது செய்தது 

arrest
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்தவர்  சவ்ஹான், இவர் குஜராத் மாநிலத்தில்  மோஹித் மராடியா என்ற பணக்காரர் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.    அப்போது அந்த வீட்டில் நிறைய நகை பணம் இருப்பதையறிந்த  அந்த சவுகான், அதை ஜன்னல் வழியாக சென்று கேமராவில் சிக்காமல் கொள்ளையடிக்க திட்டமிட்டார் .ஆனால் அவரின் உடல் எடை அதிகமாக இருந்ததால் அவரால் ஜன்னல் வழியாக போக முடியவில்லை .இதனால் தனது உடல் எடையை குறைக்க எண்ணியவர், கடந்த  பல மாத காலங்களாக டயட் இருந்து அந்த ஜன்னலுக்குள் நுழையும் அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார்.  அதனையடுத்து எதிர்பார்த்தபடி ரோஹித்  வெளியூர் சென்ற நிலையில், அந்த ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து ,அவர் வைத்திருந்த  நகை, பணம் என மொத்தம் ரூ.37 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றார்.
அதன் பிறகு ஊரிலிருந்து திரும்பிய அந்த ரோகித் நகை பணம் மற்றும் வேலைக்காரன் காணாததால் போலீசில் புகார் தந்தார் .போலீசார் விசாரணை செய்து அந்த  சவுகானை  கைது செய்து அவரிடமிருந்த நகையை கைப்பற்றினர்