கிருஷ்ணகிரி கூட்டு பாலியல் வன்கொடுமை - திடுக்கிடும் தகவல்கள்

கிருஷ்ணகிரியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மலைக்கு தமது உறவினருடன் சென்ற திருப்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கஞ்சா போதையில் இருந்த 4 பேரால் கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர்பாக கலையரசன், அபிஷேக், சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாராணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் சுட்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரின் செல்போனில் இருந்த ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதும், விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சம்பந்தப்பட்டவரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.