திருமணம் நின்றதால் ஆத்திரம் - சிறுமியின் தலையை வெட்டி மாப்பிள்ளை வெறிச்செயல்!

 
tt

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் 16 வயது சிறுமியுடன் நடைபெறவிருந்த திருமண நிச்சயதார்த்தம் பாதியில் நின்றதால், மாப்பிள்ளை ஆத்திரத்தில் சிறுமியைக் கொன்று தலையை கையோடு எடுத்துச்சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

tt

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் பிரகாஷ் என்ற 32 வயது இளைஞருடன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  திருமண வயதை அடையாததால் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பெற்றோருக்கு அறிவுரை கூறி திருமண நிகழ்வை நிறுத்தியுள்ளனர். 

tt

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பிரகாஷ்  அன்று இரவே சிறுமியின் வீடு புகுந்து சிறுமியின் பெற்றோரைத் தாக்கினார் .பின்னர் சிறுமியை சுமார் 100 மீட்டர் தூரம் வெளியே இழுத்துச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின்  தலையை துண்டித்து உடலை தூக்கி எறிந்தார்.  சிறுமியின் துண்டிக்கப்பட்ட தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை கூறப்படுகிறது. இத்தகைய வெறிச்செயலில்  ஈடுபட்டு  தலைமறைவான பிரகாஷை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.