ஆடைகளை அவிழ்த்து முழு நிர்வாணமாக நின்றேன்..அப்போது அவர்.. ஊராட்சி மன்ற தலைவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

நிர்வாண பூஜைக்கு சம்மதிக்கவில்லை என்றால் உயிர் போய்விடும் என்று அதட்டிச் சொன்னதால் அச்சப்பட்டுக் கொண்டு ஆடைகளை எல்லாம் அவிழ்த்து போட்டு முழு நிர்வாணமாக நின்றேன். அப்போது அவர் செல்போனை எடுத்து போட்டோ எடுத்தார். சிலர் நெருங்கி வந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார் என்று ஊராட்சி மன்ற தலைவர் மீது இளம்பெண் அளித்துள்ள புகார் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
தேனி மாவட்டத்தில் மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காமாட்சி. 22 வயதான இந்த இளம் பெண் தேனி மாவட்ட காவல் ஆணைய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் , தாய் தந்தையை இழந்த நான் கணவரையும் பிரிந்து வாழ்கிறேன். இப்படி ஆதரவற்ற நிலையில் இருக்கும் நான் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டடேன். ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் சேர்ந்து வாழலாம் என்று என் தோழி கண்மணி ஆலோசனை சொன்னார். இதை அடுத்து நானும் கண்மணியும் அவரின் கணவர் மனோவும் சேர்ந்து குறி சொல்லும் ஜோதிடரை செல்வராஜை பார்க்க போனோம். அவர் இப்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். போடிநாயக்கனூர் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜின் தோட்டத்து வீட்டிற்குச் சென்றோம்.
மாந்திரீகம் தாயத்து செய்ய 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார். உடனே 20000 ரூபாய் பணத்தை கொடுத்தேன். அதன் பின்னர் என்னுடன் வந்த கண்மணி, மனோவை வெளியே போக சொல்லிவிட்டு மாந்திரீக தாயத்து கட்ட வேண்டும் என்று தோட்டத்தில் உள்ள குடிசைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு குடிசைக்குள் சென்றதும் மாந்திரீகம் பலிக்க வேண்டும் என்றால் நிர்வாண பூஜை செய்ய வேண்டும். அது இப்போதே செய்ய வேண்டும் என்றார்.
நான் அதற்கு தயங்கி வெளியேற நினைத்தபோது நிர்வாண பூஜை செய்ய மறுத்தால் உயிரே போய்விடும் என்று அதட்டினார். அதைக் கேட்டு நான் அச்சம் அடைந்து உடனே என் ஆடைகள் முழுவதையும் அவிழ்த்து போட்டு முழு நிர்வாணமாக நின்றேன். அப்போது என்னை அவரது செல்போனில் போட்டோக்கள் எடுத்தார். நிர்வாண நிலையில் இருந்த என்னிடம் நெருங்கி பாலியல் தொந்தரவு கொடுத்டஹர். பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது நான் கூச்சல் போட்டு வெளியே வந்து விட்டேன்.
வெளியே வந்து வந்ததும் இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் மாந்திரிகத்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார் என்று அந்த புகாரில் கூறி இருக்கிறார் . மேலும், இது பற்றி போடிநாயக்கனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேனி எஸ். பி. அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், நான் ஊராட்சி மன்ற தலைவர் ஆன பின்னர் ஜோதிடம் பார்ப்பதே இல்லை. மக்கள் பணி செய்வதற்கு எனக்கு நேரம் போதாமல் இருக்கிறது. குடும்பப் பிரச்சனை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தான் சொன்னேன். இதற்காக என் மீது இப்படி ஒரு பொய் புகார் கூறியிருக்கிறார். நானும் எஸ். பி. அலுவலகத்தில் பிரச்சனை குறித்து விளக்கம் அளித்து இருக்கிறேன். பொட்டிபுரம் பஞ்சாயத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய சிவக்குமார் என்பவரை கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தேன். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விரோதத்தால் தான் வறுமையில் வாழும் இந்த பெண்ணை பயன்படுத்திக் கொண்டு என் மீது இப்படி பொய்யான பாலியல் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள் என்கிறார். இதில் யார் சொல்வது உண்மை என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.