பெற்றோரிடம் Complaint செய்ததால் பள்ளி தாளாளர் உடலில் 27 கத்திக்குத்து

 
s

ஐதராபாத்தின் பிரபலமான நாகர்ஜூனா பப்ளிக் பள்ளிக்கூட தாளாளரை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த 10ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹைதராபாத் முதல்வர் 27 முறை கத்தியால் குத்தப்பட்டார்: ரூ.1.51 லட்சம், ஐபோன் மற்றும் கடைசி அழைப்பில் 'பாபு' என அழைக்கப்பட்டது ஆகியவை பத்தாம் வகுப்பு கொலையாளிகளை எப்படி அம்பலப்படுத்தின?

நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தாளாளர் ரூபா ரெட்டி, தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 11 அன்று ரூபா தனது வீட்டில் தனியாக இருந்தபோது சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் 27 முறை கத்தியால் குத்தப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ரூபா தனது அத்தையுடன் கடைசியாக தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தொலைபேசியை அணைப்பதற்குச் சற்று முன்பு, ரூபா தனது அத்தையுடன் பேசும்போது 'பாபு' என்ற வார்த்தையை உச்சரித்ததாகக் காவல்துறை தெரிவித்தது. 'பாபு' என்ற சொல் மாணவர்களை அழைப்பதற்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதால், அவளது பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கக்கூடுமா என்பதைப் புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கினர். அவரது பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடம் போலீசார் துருவிதுருவி விசாரித்தனர். அப்போது, இரண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் திடீரென ஆடம்பரமாகப் பணம் செலவழிக்கவும், நண்பர்களுடன் விருந்துகளில் கலந்துகொள்ளவுமாக இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அந்த குறிப்பிட்ட 2 மாணவர்களிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என விசாரிக்கத்தொடங்கினர். சிறுவர்களில் ஒருவரிடமிருந்து ரூ.1.51 லட்சம் ரொக்கப் பணத்தையும், மற்றொருவரிடமிருந்து ஒரு ஐபோனையும் போலீசார் மீட்டனர். அந்தப் பணத்தை தனது பெற்றோர் கொடுத்ததாக அந்தச் சிறுவர்கள் முதலில் கூறினான். இருப்பினும், பணத்தை தடயவியல் பரிசோதனை செய்தபோது மனித இரத்தத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். ரூபாவை கொலை செய்த 15 நாட்களுக்கு முன், அந்த சிறுவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதாகவு, அதனை ரூபா பெற்றோரிடம் கூறியதால் வீடு புகுந்து வெறிச் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, ரூபா வீட்டில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிய அவர்களை போலீசார் கைது செய்தனர்.