காதல் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவன்! அதிர வைக்கும் பின்னணி

 
ச் ச்

ஐதராபாய் நகரில்  நல்லகுண்டாவில் காதலித்து திருமணம் செய்த மனைவி மீது சந்தேகத்தின் பேரில் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த  கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ஹுசுராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் திரிவேணி காதலித்து திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் உள்ள நல்லகுண்டாவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு  ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  வெங்கடேஷ் தனது மனைவி மீது சந்தேகத்தால்  அடிக்கடி சண்டையிட்டு பிள்ளைகள் இருக்கும்போதே கடுமையாக துன்புறுத்தி வந்துள்ளார். அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளது. இதனால் சமீபத்தில், கணவரின் துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் திரிவேணி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். வெங்கடேஷ் அங்கு சென்று திரிவேணி பெற்றோரிடம் தான் திருந்திவிட்டதாக கூறி ஐதராபாத்திற்கு அழைத்து வந்து நன்றாக கவனித்துக்கொள்வதாகவும் சமாதானப்படுத்தினார்.  அழைத்து வந்த சில நாட்களில் மீண்டும் வழக்கம் போல், மனைவியுடன் சண்டையிட்டு, கோபமடைந்து,  தாக்கினார். அதோடு நிற்காமல் வீட்டின் வெளியே இருந்த பைக்கில் பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து திரிவேணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தான்.

பின்னர் தடுக்க முயன்ற மகளையும், தீயில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அலறல் சத்தம் கேட்டு, உள்ளூர்வாசிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தீயை கட்டுப்படுத்தி, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், திரிவேணி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தினர். மகள் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தாள். போலீசார் வழக்குப் பதிவு செய்து பல இடங்களில் தேடி  12 மணி நேரத்திற்குள் வெங்கடேஷைக் கைது செய்தனர்.  சந்தேகத்தின் பேரில் மனைவியைக் கொன்றதற்காக கணவர் சிறையில் அடைக்கப்பட்டதால், இரண்டு குழந்தைகள் அனாதைகளாக விடப்பட்டனர். இரண்டு  குழந்தைகள் தங்கள் பெற்றோரை நினைத்து அழுத விதம் அங்குள்ள மக்களை மிகவும் கவலையடையச் செய்தது.