மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவன் கைதுக்கு பயந்து தற்கொலை
குடும்ப தகராறில் மனைவியை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குப்பங்குழியை சேர்ந்தவர் அன்பரசன்(55) கடந்த 18 ஆம்தேதி இவருக்கும் இவரது மனைவி கலையரசி(43) க்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் கோபமடைந்த அன்பரசன், கலையரசியை இரும்பு கம்பிகொண்டு தலையில் தாக்கியுள்ளார். மயங்கிவிழுந்த கலையரசி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து காட்டுமன்னார்கோவில் போலீசார் அன்பரசனிடம் விசாரணைக்கு சென்ற நிலையில் அன்பரசன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அன்பரசன். இதையடுத்து அன்பரசனை மீட்ட போலீசார் சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கணவன் மனைவியை அடித்து கொன்ற சம்பவத்தால் காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

