கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை கல்லால் அடித்து கொலை செய்ய முயற்சித்த கணவன்
சென்னையில் கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை கல்லால் அடித்து கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டார்.

சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் வயது (25). இவரது மனைவி புஷ்பலதா இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் விஜய்க்கும் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆன இளம் பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன்களில் மாறி மாறி பேசியும் ஒன்றாக வெளியே செல்வதும் வழக்கமாக உள்ளதால் மனைவி கள்ளக்காதலை விட்டுவிடுமாறு கணவனை பலமுறை எச்சரித்துள்ளார். இதனை கணவன் விஜய் சற்றும் கேட்காததால் ஒரு கட்டத்தில் விஜய்க்கும் புஷ்பலதாவுக்கும் சண்டை பலமாக முற்றியது.
அப்போது கீழே இருந்த கல்லை எடுத்த விஜய் அவரது மனைவி புஷ்பலதா மீது பலமாக தாக்கினார். அப்போது தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் புஷ்பலதா கீழே சரிந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் புஷ்பலதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சென்னை கிளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியான விஜய் என்பவரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.


