கள்ளக்காதலனை கைவிடாததால் கணவர் தற்கொலை! போலீசுக்கு பயந்து மனைவி தற்கொலை

எவ்வளவு கண்டித்து பார்த்தும் மனைவி கள்ளக்காதலனை கைவிடாததால் மனம் உடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது போலீசுக்கு பயந்து மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூர் மாவட்டத்தில் மூடிகெரே தாலுகாவில் உக்கேஹள்ளி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரின் மனைவி நேத்ரா. திருமண திருமணத்திற்கு பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த தனஞ்செயா என்பவருடன் நேத்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் கள்ள உறவாக மாறி இருக்கிறது . நேத்ராவும் தனஞ்செயாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் ஜெகதீசுக்கு தெரிய வந்ததை அடுத்து அவர் மனைவியை கண்டித்து இருக்கிறார். எத்தனையோ முறை கண்டித்து பார்த்தும் நேத்ரா கள்ளக்காதலை விடாமல் தனஞ்செயாவை சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.
இதை நினைத்து மனம் உடைந்த ஜெகதீஷ் கடந்த மூன்றாம் தேதி அன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தன் மகன் ஜெகதீசன் சாவுக்கு காரணம் மருமகள் தான் என்று யசோதாம்மா போலீசில் புகார் அளித்திருக்கிறார். கோணிப்பீடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது, போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார் நேத்ரா.
மூன்று நாட்களாக நேத்ராவை தேடி வந்த நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள காப்பி தோட்டத்தில் தூக்கில் சடலமாக தொங்குவதாக போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. அதன் பின்னர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.