கத்தியோடு பாய்ந்த கணவன் -அந்த கத்தியை பிடுங்கிய மனைவி -அடுத்து நடந்த விபரீதம்

 
murder

 கத்தியால் குத்திய  கணவனை, அந்த கத்தியை புடுங்கி அந்தக் கணவரை குத்திய மனைவியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 

murder

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் ஷாபுரா பகுதியை சேர்ந்தவர் 25 வயதான  ஏக்தா என்ற பெண் இவரது கணவர் பிரகாஷ் யாதவ்வுடன் வசித்து வந்தார் . இந்நிலையில் அந்த பெண் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்காக, பர்கத் நகர் பகுதியில் வாடகைக்கு தனி வீடு பிடித்து  தங்கியிருந்தார்.இதனால் அவரின் கணவர் தன் மனைவி ஏக்தாவை தன்னோடு வருமாறு அடிக்கடி வந்து கூப்பிட்டார் .ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்து தனியாக படித்து வந்தார் .இதனால் அந்த பிரகாஷ் அந்த மனைவி மீது கடும் கோபம் கொண்டார் 
இதனால் சமீபத்தில் அவரது வீட்டிற்கு கத்தியுடன் பிரகாஷ் வந்தார். அங்கு தம்பதி இடையே கடும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் சரமாரியாக தாக்கிக் கொண்டதன் விளைவாக கடும் ரத்தப்போக்கால் இருவரும் மயங்கி விழுந்தனர்.

இந்த சம்பவம் நடந்து சில மணி நேரங்களுக்கு பின், ஏக்தாவை தேடி வந்த உறவினர் ஒருவர், ஜன்னல் வழியாக அவர்களது நிலையை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இருவருக்கும் சுயநினைவு திரும்பிய பிறகு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்