ஃபேஸ்புக் நண்பருடன் சென்ற மனைவியை காவலர் கண்முன் கொலை செய்த கணவர்

 
murder

தெலங்கானா மாநிலம் சதாசிவபேட்டையில் ஃபேஸ்புக் நண்பருடன் சென்ற மனைவியை காவலர் முன்னிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

murder


தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், ஜரசங்கம் மண்டலத்திலுள்ள தும்மன்பள்ளியைச் சேர்ந்த சித்தா ரெட்டி (30), 12 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (30) என்பவதை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.  ஜஹீராபாத்தில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் சித்தா ரெட்டி குடும்பத்துடன் வசித்து, ஒரு சிறு தொழில் செய்து வருகிறார். கவிதா வீட்டில் தையல் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கவிதா சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பவன் குமார் ரெட்டி என்பவருடன்  தொடர்பு ஏற்பட்டது  இதன் தொடர்பு திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறி கடந்த மாதம் 27 ஆம் தேதி, அவர் பவனுடன் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஜட்சர்லாவுக்குச் சென்றார்.இதனால் மனைவியை பல இடத்தில் தேடியும் கிடைக்காததால்   சித்தா ரெட்டி கடந்த மாதம் 30 ஆம் தேதி ஜஹீராபாத் காவல் நிலையத்தில்  மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார். விசாரணையை மேற்கொண்ட போலீசார் கவிதா தனது காதலன் பவனுடன் ஜட்சர்லாவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.ஜட்சார்லாவில் கவிதாவையும் பவனையும் கண்டறிந்த ஜஹீராபாத் போலீசார் முதலில் பவனை அழைத்து காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தனர். இருப்பினும், கவிதா தன்னுடன் இருப்பதாகவும், ஜஹீராபாத்திற்கு வரமாட்டேன் என்றும் அவர் கூறியதால்  சித்தா ரெட்டி ஒரு காவலருடன் காரில் ஜட்சார்லாவுக்குச் சென்றார். அங்கு  உள்ளூர் போலீசார்  மூலம் காவல் நிலையத்திற்கு கவிதாவையும், பவனையும் வரவழைத்தனர். 

காவல் நிலையத்திலேயே கவிதாவுக்கும் - சித்தா ரெட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவலர்கள் சித்தா ரெட்டியை வெளியே காத்திருக்குமாறு கூறியதால் அவர் காவல் நிலையத்திலிருந்து வெளியே சென்று அங்கிருந்து ஒரு காய்கறி வெட்டும் கத்தியை வாங்கித் தன்னுடன் மறைத்து வைத்து கொண்டார். பின்னர் சித்தா ரெட்டி, கவிதா மற்றும் பவன் ஆகியோர் காரின் பின் இருக்கையில் அமர்ந்தனர். காவலரும் டிரைவரும் முன் இருக்கையில் இருக்க காரில் செல்லும் போது  கார் நந்திகாட்டியை நெருங்கியபோது ​​சித்தாரெட்டி திடீரென கவிதாவைத் கத்தியால் தாக்கி, அவரது கழுத்திலும் தலையிலும்  குத்தினார். முன் இருக்கையில் இருந்த காவலர் சுதாரிப்பதற்குள் கவிதா கழுத்து அறுக்கப்பட்டுவிட்டது. இதில் படுகாயமடைந்த கவிதாவை  உடனடியாக சங்கரெட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போலீசார் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்தனர். இதையடுத்து, சடலம் ஜஹீராபாத் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  சித்தா ரெட்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்டு  தந்தை சிறைக்குச் சென்றதால் அவரது இரண்டு குழந்தைகளும் அனாதையாக மாறினர்.