சொத்து தகராறில் 80 வயது மனைவியை கொலை செய்த 93 வயது கணவர்
Jul 1, 2025, 15:30 IST1751364016000
திருவாடானை அருகே சொத்து தகராறில் 80 வயது மனைவியை கொலை செய்த 93 வயது கணவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சித்தம்பூரணி கிராமத்தை சேர்ந்த 93 வயதான வேதமுத்து. இவரது மனைவி சவுரியம்மாள் (80). இவர்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சவுரியம்மாளின் சொத்துக்கள் ஏற்கனவே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மகளுக்கு அதிகமான சொத்து எழுதி கொடுத்ததாக கணவன்- மனைவிக்கிடையே சண்டை நடந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வேதமுத்து, மனைவி சவுரியம்மாளை பிடித்து தள்ளியதில் நிலை தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுகுறித்து தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேதமுத்துவை கைது செய்தனர்.


