நடத்தையில் சந்தேகம்- தலையை சுவற்றில் மோதி மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
ஓசூர் அருகே மனைவி நடத்தை மேல் சந்தேகப்பட்டு சுவற்றில் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே உள்ள சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (45) பெயிண்டர் தொழில் செய்து வருபவர், இவருடைய மனைவி கல்பனா (35)இவர் ஓசூரில் வீட்டு வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அனந்தகுமார் தன் மனைவி நடத்தை மேல் சந்தேகப்பட்டு ஆனந்தகுமார் மனைவியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது
இந்நிலையில் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற ஆனந்தகுமார் கல்பனா இடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் கட்டை மற்றும் சுவற்றில் கல்பனா தலையை பலமாக தாக்கியதாக தெரிகிறது பலத்த காயமடைந்து மயங்கிய கல்பனா சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில் ஆனந்தகுமார் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி உள்ளார். இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த பாகலூர் போலீசார் உயிரிழந்த கல்பனா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த குமாரை தேடி வருகின்றனர். மனைவி நடத்தை மேல் சந்தேகப்பட்டு குடிபோதையில்கொலை செய்த சம்பவம் சூடாபுரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.