தாயின் இறுதிச்சடங்கிற்கு சென்ற மனைவி தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த கணவன்

 
murder

சின்னசேலம் அருகே மாமியாரின் இறுதிச்சடங்கு நிகழ்விற்கு சென்ற மனைவியின் மீது அம்மி குழவி கல்லை தலையில் போட்டு கொலை செய்தவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கொடூர கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள நாககுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர். இவரது மனைவி சின்னபிள்ளை இந்த தம்பதியினருக்கு கார்த்திக், அம்சு, ரமேஷ் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் மூவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாக்குப்பம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மனைவியுடன் ராமர் வசித்து வருகின்றார். கடந்த 20 வருடங்களாக ராமர் தனது மாமியார் குடும்பத்துடன் பேச்சுவார்த்தையில் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னப்பிள்ளையின் தாய் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். அவரது கரும காரிய நிகழ்விற்கு சின்னப்பிள்ளை சென்றுவிட்டு நேற்று மதியம் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டிலிருந்த ராமர் தனது சொல்லை மீறி ஏன் உனது அம்மா வீட்டிற்கு சென்று வந்தாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு உச்சகட்டத்தை எட்டிய நிலையில் ராமர் சின்னப்பிள்ளை படுத்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த அம்மி குழவி கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு நேரடியாக சின்னசேலம் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் நடந்தவற்றை கூறி சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜராமன் தலைமையிலான சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்து கிடந்த சின்னப் பிள்ளையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். 

murder

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சின்னசேலத்தில் மாமியார் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் படுத்து இருந்த தனது மனைவியை அம்மி குழவி கல்லை தலையில் போட்டு கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.