தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

 
murder

திருத்தணி அருகே குடும்பத் தகராறு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்து அறுத்து கொடூர கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

murder

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த செல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் விஜயன்(35). ராணுவத்தில்10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர் தற்போது அசாம் மாநிலத்தில்  பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மோகனா (30) என்ற மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் தற்போது ஒரு மாத கால விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். ராணுவ வீரர் விஜயன் புதிதாக கட்டியுள்ள வீடு தொடர்பாக கணவன், மனைவியிடையே கடந்து சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு  குடிபோதையில்  வீட்டுக்கு சென்ற விஜயன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவரது மனைவி மோகனாவை பேனா கத்தியால் கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்தார். இச்சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவல் அறிந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மோகனா சடலத்தை மீட்டு பிரதமர் சோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராணுவ வீரர் விஜயனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.