செல்போனில் மூழ்கியதால் ஆத்திரம்- மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

 
murder

புதுச்சேரியில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த மெக்கானிக் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

murder

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 23). மெக்கானிக்.  இவருக்கும் புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த சுவேதா (19) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுவேதாவை ஏழுமலை திருமணம் செய்து கொண்டார். லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் வீடு எடுத்து தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சுவேதா செல்போனிலே பேசிக் கொண்டும், சாட்டிங செய்து கொண்டும் இருந்துள்ளார். இதனால் ஏழுமேலைக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுவேதா செல்போனில் பேச, சாட்டிங் செய்ய ஏழுமலை தடை போட்டார். ஆனாலும் சுவேதா செல்போனிலேயே மூழ்கி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஏழுமலை தூங்கி எழுந்த போது, சுவேதா செல்போனை பார்த்து கொண்டிருந்தார். ஆத்திரம் அடைந்த ஏழுமலை மனைவியுடன் தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் செல்போன் சார்ஜர் ஒயரை எடுத்து மனைவியின் கழுத்தை சுற்றி இறுக்கினார்.

இதில் மயக்கம் அடைந்து சுவேதா கீழே விழுந்தார். அப்போது சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுவேதா கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சுவேதா சம்பவ இடத்தில் இறந்தார். அதைத்தொடர்ந்து ஏழுமலை கோரிமேடு போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.