மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூர கணவன்

மணப்பாறை அருகே குடும்ப தகராறில் கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த மனைவி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ராஜாளிகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (62). இவருக்கு செல்லம்மாள் (48). மல்லிகா (45) என்ற இரு மனைவிகள் உள்ளனர். மல்லிகா ராஜாளிகவுண்டம்பட்டியில் மகனுடன் உள்ள நிலையில் சின்னத்தம்பி - செலாலம்மாள் இருவரும் மாலைமடைப்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வேளாண் பணிகளை கவனித்து வந்த நிலையில் சின்னத்தம்பி விவசாய பணிகளில் கவனம் செலுத்தாதாலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் வேலையைக்கூட செய்யாததால் இருவருக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கு அவ்வப்போது குடும்ப பிரச்சினை நடந்து வந்த நிலையில் நேற்று இரவும் தகறாறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி செல்லம்மாள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி சின்னத்தம்பி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த செல்லம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் 90 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்ககு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னத்தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவன் மனைவியை தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.