“எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியில்ல; உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பா?”- மனைவியை கொலை செய்த கணவன்

 
s

காஞ்சிபுரம், பாலையசிவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

படம்


காஞ்சிபுரம், பழையசீவரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் (28) ஊர்க்காவலராகப் பணியாற்றி வந்தார். இவரும் ஆனம்பாக்கத்தைச் சேர்ந்த சோனியா (28) என்பவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் சோமசுந்தரத்தின் வீட்டில் வசித்து வந்த நிலையில், சோனியா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் சோனியா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, சோனியா தனது தாயார் வீட்டில் இருந்தபோது, ​​அங்குவந்த சோமசுந்தரம், “உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் அப்பா இல்லை” என மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். மேலும் சோனியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும், சாலவாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சோனியாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அதே பகுதியில் பதுங்கியிருந்த சோமசுந்தரத்தை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு மருத்துவ நிலை இருப்பதால், தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதாக அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.