“நீ ஆட்டோ ஓட்டுடி செல்லம்...” இன்ஸ்டாகிராமில் மூழ்கிய மனைவிக்கு கணவன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்
சென்னையில் இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகியதால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கணவன், காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் மேனாம்பேடு, இந்திரா நகரை சேர்ந்தவர் வைதேகி (28), அவரது கணவர் சின்னா(32). ஆட்டோ ஓட்டுநரான சின்னாவும், வைதேகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை உள்ளனர். வைதேகி கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த நிலையில், அவருக்கு அதில் ஏராளமான ஆண் நண்பர்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர்களில் சிலருடன் வைதேகி நட்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னா கண்டித்தும் வைதேகி கேட்கவில்லை. இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வைதேகி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்றார். அண்மையில் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு வந்த வைதேகி, அங்கு வசித்துவந்தார். இதனையறிந்து அங்கு சென்ற சின்னா அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பிறகும் வைதேகி, அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்வதும் ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவதுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த கோபத்திலிருந்து வந்த சின்னா, வைதேகியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வைதேகியிடம், `நீ ஆட்டோவை ஓட்டு, நான் பின்னால் அமர்ந்து வருகிறேன்' என்று சின்னா கூறியுள்ளார். இதையடுத்து வைதேகி ஆட்டோ ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்திருந்த சின்னா, ஆள் நடமாட்டம் இல்லாத கள்ளிக்குப்பம் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைதேகியின் கழுத்தை பின்னால் இருந்து அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மூழ்கிய வைதேகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சின்னாவை கைது செய்த போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். வைதேகியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

