கள்ளக்காதலனுடன் வீடியோ கால் பேசிய மனைவியை அடித்து கொலை செய்த கணவன்
ஆரணி அருகே மனைவி வேறு ஒரு நபரிடம் வீடியோ காலில் பேசியதையறிந்த கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத்குமார்(41). இவருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ஆஷா பெண்ணுடன் திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனையடுத்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே திருமணமாகி கணவன் இழந்த கவிதா என்பவருடன் பழக்கக் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் வினோத்குமார் கவிதாவை 2வது திருமணம் செய்த பின்னர் வினோத்குமாருக்கும் கவிதாவிற்கும் ம ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் வினோத் குமார் முதல் மனைவி ஆஷா 2 மகள் மற்றும் 2வது மனைவி கவிதா அவர்களுடைய 2 மகன் மற்றும் வினோ குமாரின் தாயார் சுந்தரி ஆகியோர் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிதாவிற்கும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது இரண்டாவது மனைவி கவிதா, வேறு நபருடன் போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது, பின்னர் அந்த வாலிபர் கவிதாவுடன் வீடியோ காலில் பேசும் வீடியோ அந்த வாலிபர் மூலமாக வேறு ஒரு நண்பருக்கு பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் வினோத்குமாருக்கு தெரிய வர ஆத்திரமடைந்த வினோத் வீட்டிற்கு சென்று கவிதாவிடம் கேட்டபொழுது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார், கவிதாவை கையால் சரமாறியாக தாக்கியுள்ளார். இதில் கவிதா நிலை தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்தார். பின்னர் வினோத்குமார் மற்றும் அவரது மகள்கள் கவிதாவை ஆட்டோ மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் கவிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்தவர்கள் கூறினர்.
இருப்பினும் சந்தேகப்பட்ட மருத்துவர், கவிதாவின் இறப்பு குறித்து கேட்டபோது ஆரணி வாழைப்பந்தல் சாலையில் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார் எனக் கூறினார். இதனால் மேலும் சந்தேகமடைந்த மருத்துவர் சம்பவம் குறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் வினோத்குமாரிடம் விசாரணை செய்தனர். இதில் வினோத் குமார் முன்னுக்குப்பின் முரணாக காவல்துறைனரிடம் கூறியதால், காவல்துறையினர் கிடுக்கு பிடி விசாரணையில். ஈடுபட்டனர். பின்னர் ஒரு கட்டத்தில் வினோத்குமார் தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் வினோத்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

