தகாத உறவில் இருந்த மனைவி, ஆண் நண்பரை கொன்ற கணவர்

 
தகாத உறவில் இருந்த மனைவி, ஆண் நண்பரை கொன்ற கணவர்

அருப்புக்கோட்டை அருகே மனைவியையும் காதலனையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவன் கைது செய்யபட்டார். 

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி பகுதியில் தகாத உறவில் இருந்த மனைவி, அவரது ஆண் நண்பரை கொடூரமாக வெட்டிக் கொன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையம்பட்டியை சேர்ந்த 21 வயதான பொன்னழகு என்பவரும், 30 வயதான ஆனந்தராஜ் என்பவரும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னழகுவின் கணவர் சரவணக்குமார், நேற்று இரவு தனது வீட்டில் இருவரையும் பார்த்த இடத்திலேயே வெட்டி கொன்றார். 

சரவணக்குமார்- பொன்னழகு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், ஆனந்தராஜ் என்பவருடன் பொன்னழகு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன் தகாத உறவை அறிந்த சரவணக்குமார் இருவரையும் கண்டித்த போதிலும் அவர்கள் கேட்கவில்லை. கட்டிட வேலைக்கு சென்றபோது ஏற்பட்ட பழக்கம் வீடு வரை தொடர்ந்ததால் ஆத்திரத்தில் இருந்த சரவணக்குமார், இருவரையும் வெட்டிக்கொன்றார். 

உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார்.பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் இரட்டை கொலை  வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை