நடத்தையில் சந்தேகம்... மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்

 
murder murder

கும்பகோணம் அருகே அணைக்கரையில் மனைவி தலையில் குளவிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

murder


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 38). கூலிதொழிலாளியான இவரது மனைவி அகிலா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது  இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அகிலாவின் நடத்தையின் மீது அன்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அன்பரசன் குடிப்பழக்கம் உள்ளவர்.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் அகிலா தூங்கிக் கொண்டிருக்கும்போது கிரைண்டர் குளவி கல்லை எடுத்து அகிலாவின் தலையில் போட்டுள்ளார். இதில் அகிலா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அன்பரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அகிலாவின் உடலை உடல் கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அணைக்கரை பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement