தோட்டத்து வீட்டில் கள்ளக்காதலனுடன் மனைவி உற்சாகம்! கணவன் செய்த வெறிச்செயல்

 
murder murder

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகவேல் வயது (56). இவருக்கு சுமத்ரா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். சுமத்ரா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவியின் கள்ளக் காதலன் முனியாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

murder

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகவேல் வயது (56) இவருக்கு சுமத்ரா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில் மகனுடன் கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறார். முருகவேல் மனைவி சுமித்ராவுடன் (45) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தபோது, அவருடன் வேலை பார்த்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி என்பவர் உடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. முனியாண்டிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். முனியாண்டி உடனான தொடர்பு  கள்ளக்காதலாக மாறி சுமத்ரா தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகினர். 

இது தொடர்பாக முருகவேல் கொடுத்த புகாரின் பேரில், சுமத்திராவை கண்டுபிடித்த போலீசார் அறிவுரை கூறிய முருகவேலுடன் அனுப்பி வைத்தனர். தாராபுரத்தில் இருந்தால் பிரச்சனை தொடரும் என்று நினைத்த முருகவேல் தனது மனைவியுடன் திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு இடம் மாறி உள்ளார். இதைதெரிந்து கொண்ட முனியாண்டி அங்கும் வந்து சுமத்ராவுடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார். மீண்டும் தேடி கண்டுபிடித்து சுமித்ராவை தன்னுடன் அழைத்து வந்து தற்போது கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள மறைவான ஒரு தோட்டத்து வீட்டில் தனது மகனுடன் முருகவேல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மகன் அதே தோட்டத்து பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் முருகவேல் சூலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சமையலராக வேலை செய்து வந்துள்ளார். 

murder

கள்ளக்காதலனை கைவிட மறுத்த சுமத்திரா மீண்டும் முனியாண்டி உடன் தொடர்பில் இருந்தார். நேற்று கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள முருகவேல் குடியிருக்கும் தோட்டத்து சாலைக்கு வந்துள்ளார். மாலை பணிக்கு சென்று விட்டு திரும்பிய முருகவேல் வீட்டிற்கு வந்தபோது ஆச்சரியம் காத்திருந்துள்ளது. வீட்டில் இருந்து முனியாண்டி வெளியே வருவதை பார்க்த்த முருகவேல் ஆத்திரமடைந்து வீட்டிற்குள் சென்று வீட்டிலிருந்தே கத்தியை எடுத்து வந்து முனியாண்டியின் மார்பில் ஓங்கி குத்தியுள்ளார். கத்தி மார்பில் குத்திய நிலையில் குத்திய கத்தியுடன் முனியாண்டி வாசலில் வந்து விழுந்து துடித்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் மார்பில் இருந்த கத்தியை முனியாண்டி வெளியே உருவியுள்ளார். கத்தி வெளிவந்த நிலையில் அதிக அளவு ரத்தம் வெளியேறியதில் முனியாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இது தொடர்பாக தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கொலை செய்த முருகவேல் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தனது மனைவியை தக்க வைத்துக்கொள்ள பலமுறை முயற்சி செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் கள்ளக்காதலன் தொடர்ந்து டார்ச்சர் செய்து தனது மனைவியை அபகரித்துச் செல்ல முயன்றதால் கள்ளக்காதலனை கொலை செய்ததாக முருகவேல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.