கட்டிலில் தூங்கிய மனைவியை வெட்டி கொன்ற கணவன்

 
murder

தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் அருகே உள்ள ராஜகணபதி நகரில் மனைவி நடத்தையில் சந்தேகம் காரணமாக கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி ரெஜனா மேரியை அறிவாளால் வெட்டி படுகொலை செய்த கணவன் நாகேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder


தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரெஜினா மேரி இவர்களது குழந்தைகளுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரெஜினா மேரிக்கு ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக பலருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வேறு ஒரு ஆண் நண்பருடன் ரெஜினா மேரி சென்றதாக கூறப்படுகிறது

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரெஜினா மேரி வீடு திரும்பி உள்ளார் இந்நிலையில் இன்று வீட்டில் வெளிப்பகுதியில் ரெஜினா மேரி கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கணவன் நாகேந்திரன் அவரை அறிவால் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் உடலின் பல்வேறு பாகங்களில் வெட்டுப்பட்ட ரெஜினா மேரி ரத்த வெள்ளத்தில் அலறியபடி துடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெஜினாமேரி சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார், மனைவியை வெட்டிய கொலை செய்த லாரி டிரைவர் நாகேந்திரன் உடனடியாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தூத்துக்குடியில் லாரி டிரைவர் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.