கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவிக்கு விஷ ஊசி போட்ட கணவர்

 
kee

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவிக்கு விஷ ஊசி செலுத்திக் கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்.   இவர் தனியார் மருத்துவமனையில் உணவக மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.   ஸ்ரீதரன் மனைவி கீர்த்தனா. இத்தம்பதிக்கு சாய் சர்வேஸ் என்ற மகன் உள்ளார். 

 அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி செந்தாம்பாளையத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் ஸ்ரீதரன்.   இவருக்கும் அவருடன் வேலை செய்யும் பெண் ரம்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் கள்ள உறவாக மாறி இருக்கிறது.  இந்த கள்ள உறவு விவகாரம் கீர்த்தனாவுக்கு தெரிய வந்ததும் கணவரை கண்டித்து இருக்கிறார்.

s

 இதனால் கணவன் -மனைவிக்கு இடையே தினமும் வாக்குவாதம் ,தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ஸ்ரீதரன் இது தொடர்பான வாக்குவாதங்களில் மனைவியை கடுமையாக தாக்கி வந்திருக்கிறார்.   நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போக, மனைவியை கொன்று விடலாம் என்று கள்ளக்காதலையுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் .  

அப்போதுதான் விஷ ஊசி செலுத்தி கொன்று விடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.  அதன்படி  கள்ளக்காதலி உடன் சேர்ந்து மனைவிக்கு விச ஊசி செலுத்தி இருக்கிறார் ஸ்ரீதரன்.   இதை அடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் கீர்த்தனா புகார் அளித்திருக்கிறார்.   புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீதரனையும், அவரது கள்ளக்காதலி ரம்யாவையும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பழனி என்பவரையும் கைது செய்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில் கீர்த்தனாவிற்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயன்றது தெரிய வந்திருக்கிறது.

வழக்கு பதிவு செய்யப்பட்டதும் ஸ்ரீதரனை முதலில் கைது செய்தனர் போலீசார்.  இது தெரிந்ததும் ரம்யாவும் பழனியும் தலைமறைவாக இருந்திருக்கிறார்கள்.  அவர்களை பிடிக்க போலீசார் தேடி வந்த போது கோவையில் சின்னியம்பாளையம் ஆர். ஜே . புதூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.  அங்கு விரைந்து சென்ற அன்னூர் போலீசார் ரெண்டு பேரையும் கைது செய்து அன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.