பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்
நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் பட்ட பகலில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து பாலாமடை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 33). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் 2 குழந்தைகள் உள்ளது. அடிக்கடி சுதாகருக்கும் பேச்சியம்மாளுக்கும் இடையே கணவன் மனைவி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் பலமுறை பேச்சியம்மாள் கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுவது வழக்கமாக வைத்திருக்கின்றார். இந்த நிலையில் இன்று காலையும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிற நிலையில் தாழையூத்திலிருந்து பேச்சியம்மாள் கணவரிடம் கோபித்துக் கொண்டு ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார்.
மனைவியை சமாதானம் செய்வதற்காக சுதாகரன் ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதல் ஆத்திரத்தில் இருந்த சுதாகர் அரிவாள் கொண்டு வந்து மனைவி பேச்சியம்மாளை கொலை செய்யும் நோக்கத்திற்காகவும் வந்திருக்கிறார். ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் மனைவியை சமாதானம் செய்யும் முயற்சியில் சுதாகர் ஈடுபட்டு இருக்கிறார் அதற்கு அவர் உடன்படாததால் ஆத்திரமடைந்த சுதாகர் தான் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவத்தை பார்த்த ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் அச்சத்தில் அலறிஅடித்து ஓடினர். தகவல் அறிந்த ஜங்ஷன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பெண்ணின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை செய்துவிட்டு சுதாகர் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ஜங்ஷன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இளம்பெண்வெட்டி கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

