கத்தி குத்தில் மனைவி இறந்து விடுவார் என பயந்து தூக்கிட்டு கணவர் தற்கொலை

கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விடுவார் என்று அச்சப்பட்ட கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சென்னையில் ஆவடி அடுத்த பட்டாபிராம். இப்பகுதியில் மசூதி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் . அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார் மணிகண்டன். மனைவி கவுதமி. இரு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். நேற்று கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மனையின் கழுத்தில் கத்தியால் குத்தி இருக்கிறார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்ததும் அவரது மகன் ஓடிவந்து தாயை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார் . அங்கு கௌதமி தீவிர சிகிச்சை பதிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் கத்தியால் குத்தியதால் மனைவி இறந்து விடுவார் என்று அச்சத்தில் இருந்த கணவர் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.