"மனைவியின் பிணத்தின் மீது பலநாள் வாழ்ந்த விவசாயி "-கதற வைக்கும் காரணம் ?

 
murder

மனைவியை கொன்று உடலை வீட்டுக்குள் புதைத்து விட்டு பன்னிரண்டு நாள் அதன் மீது வாழ்ந்த விவசாயி கைது செய்யப்பட்டார் 

The dead woman's body. Focus on hand  woman murder stock pictures, royalty-free photos & images

கர்நாடக மாநிலம்   சித்ரதுர்கா மாவட்டம் கொனனூர் கிராமத்தில் வசிக்கும் நாகப்பா ஒரு   விவசாயி ஆவார் . இவரது மனைவி 30 வயதான சுமாவுக்கும் இவருக்கும் அடிக்கடி தகறாரு வந்துள்ளது .இதற்கு காரணம் அவருக்கு தன் மனைவியின் நடத்தையில் வந்த சந்தேகம் .அதனால் கடந்த டிசம்பர் 26ம் தேதி அந்த நாகப்பா தன் மனைவியை அடித்து கொலை செய்து விட்டார் .
பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ,அவரின் உடலை தன் வீட்டில் ஒரு பள்ளம் தோண்டி புதைத்து விட்டார் .பின்னர் அந்த பிணத்தின் மீதே பன்னிரண்டு நாட்களுக்கு மேல் வாழ்ந்தார்  .இந்நிலையில் அந்த சுமாவின் பெற்றோர் தங்களின் மகளிடமிருந்து எந்த தகவலும் இல்லாததாலும் ,போனை அவர் எடுக்காததாலும் சந்தேகப்பட்டு ,அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து  அந்த கணவர் நாகப்பாவை கைது செய்து விசாரித்த போது ,அவர் தன் மனைவியை கொன்று  வீட்டில் புதைத்து வைத்த விவரத்தை கூறினார் .அதன் பிறகு போலீசார் அந்த வீட்டிலிருந்து அந்த பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு ,அந்த நாகப்பாவிடம் விசாரித்து  வருகின்றனர்