சிகப்பாக இருக்கும் பெண்களிடம்.. கண்ட இடத்தில் கையை வைப்பார்... 41 மாணவிகள் பாலியல் புகாரை மறுக்கும் பேராசிரியர்

 
ல்

 41 மாணவிகள் அளித்த புகாரில் நடந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மதுரை அரசு மருத்துவமனையின் மயக்கவியல் துறை மூத்த உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார் மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேல்.

 மதுரை அரசு மருத்துவமனையின் மயக்கவியல் துறையில் மூத்த உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன்.  இவரின் மீது 41 மாணவிகள் பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர். ஆனால்,  தன் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார் மயக்கவியல் துறையின் மூத்த உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன்.

ட்

 அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்ட குழு மாநில பொதுச்செயலாளராக இருக்கிறேன்.  மருத்துவர்களின் பிரச்சனைக்காக நான் தொடர்ந்து போராடி வருகின்றேன். பதவி உயர்வு, இட மாறுதலில் நடக்கின்ற குளறுபடிகள் மற்றும் பல்வேறு முறைகேடுகளை தட்டி கேட்டு வருகிறேன்.  கலந்தாய்வில் பங்கேற்காத ஆறு பேர் மதுரை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் உதவி பேராசிரியர்களாக கடந்த ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டார்கள்.  இந்த நிலையில் தான் விபத்தில் காயம் அடைந்த ஒரு மருத்துவ மாணவி தீவிர சுவாச சிகிச்சை பிரிவிற்கு வந்தார் . அவரை நலம் விசாரித்தேன் . அவரிடம் பாலுணர்வை தூண்டும் வகையில் நான் பேசியதாக எனக்கு எதிராக அந்த மாணவியை வற்புறுத்தி புகார் வாங்கப்பட்டிருக்கிறது.  அந்த புகாருக்கு ஆதாரம் இல்லாத நிலையில் அவசரகதியில் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.  என் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றத்தின் மூலமாக சட்டப் போராட்டம் நடத்தி அப்பழுக்கற்றவன் என்பதை நிரூபிப்பேன் எனக் கூறியிருந்தார்.

 ஆனால் மருத்துவக் கல்லூரி இயக்குநர் ரத்தினவேல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  மயக்கவியல் துறையில் மூத்த உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன் மீதான பாலியல் புகார் பற்றி விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.  இந்த விசாரணையில் 41 மாணவிகள் பதில் அளித்து இருக்கிறார்கள் . இந்த விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கை அடிப்படையில்தான் பேராசிரியர் சையது தாகீர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

ல்ல்

ஆபரேஷன் தியேட்டரில் கண்ட இடத்தில் கையை வைப்பார்.  கண்ட இடத்தில் தொட்டு பேசுவார்.  ஆபரேஷன் தியேட்டரில் கூட முகக் கவசத்தை கழட்டி விட்டு தான் பேச வேண்டும் என்று வற்புறுத்துவார்.  முகக்கவசத்தை கழட்டாமல் இருந்தால் அவரே கழற்றி விடுவார்.  உடல் நிறத்தை கேலி செய்து பேசுவார்.  சிகப்பாக இருக்கும் பெண்களிடம் உன் அம்மா அப்பா புண்ணியம் செய்தவர்கள்.  அதனால்தான் உன்னை சிகப்பாக பெற்றெடுத்திருக்கிறார்கள் என்று பேசுவார் என்று மாணவிகள் விசாகா கமிட்டியில் குமுறி இருக்கிறார்கள்.  

 மாணவிகள் மட்டுமல்லாது நோயாளிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் என்று புகார்கள் கூறப்பட்டிருக்கின்றன . மருத்துவ மாணவிகளிடம் தலைமுடியை பிடித்து இழுத்து பின்னால் இருந்து கூப்பிடுவார் . நீ அழகா இருக்கிறாய் தலைமுடி அழகாக இருக்கிறது . புருவத்தை அழகாக வரைந்து வைத்திருக்கிறாய் என்றெல்லாம் கூசும்படி பேசுவார் என்று கூறியிருக்கிறார்கள்.  இளம்பெண் ஒருவர் தனது நோயாளி உறவினரை இழந்து கதறிய போது அவரை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார் . ஒரு டாக்டர் இப்படி எல்லாம் செய்யக்கூடாது.  ஆனால் அப்படியெல்லாம் அவர் அசிங்கமாக நடந்து கொண்டார் என்று கூறி இருக்கிறார்கள்.