தோழியின் தந்தை தந்த தொல்லை -சிறுமி தற்கொலை

 
s

தோழியின் தந்தை கொடுத்து வந்த பாலியல் தொல்லையால்  விரக்தி அடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  இதை அடுத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஆக்ரா  அடுத்த  எட்மத்பூர் நகரச் சேர்ந்த சிறுமி தனது தோழியுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.  அப்போது சிறுமியின் தந்தை ராகவேந்திர சிங் சவுகான் அந்த சிறுமியை நோட்டமிட்டு வந்திருக்கிறார்.  

ss

 மகளிடம் இருந்து செல்போன் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு அந்த சிறுமிக்கு போன்செய்து  ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.  ராகவேந்திர சிங் சவுகான் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால்  இந்த பாலியல் தொல்லை குறித்து குடும்பத்தினரிடம் பலமுறை சொல்லி வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் தான் ராகவேந்திரவின் பாலியல் தொல்லையால் விரக்தி அடைந்த சிறுமி, கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  தோழியின் தந்தை அடிக்கடி செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்று பெற்றோரிடம் சொன்ன போது பெற்றோர் உடனே போலீசில் புகார் அளிக்காததால்தான் இந்த தற்கொலை நடந்திருக்கிறது.

ராகவேந்திரா மீது போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.   இந்த புகாரின் பேரில்  ராகவேந்திர சிங் சவுகான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  அப்போது அவரிடம் இருந்த இரண்டு செல்போன்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.  அவர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது . 

சிறுமியின் தற்கொலைக்கு பின்னரே  இந்த அதிரடி முடிவை பெற்றோரும் போலீசாரும் எடுத்துள்ளனர்.   அந்த சிறுமி உயிருடன் இருக்கும் போது இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அந்தச் சிறுமி என்று உயிருடன் இருப்பார் என்று பலரும் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.