கல்லூரி அருகே அரை நிர்வாணத்துடன் இளம்பெண்ணின் சடலம் மீட்பு
Jun 24, 2026, 17:33 IST1782302601605
கோயம்புத்தூர் புதூர் அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

புதூர் மேற்கு புறவழிச்சாலை பகுதியில் உள்ள சிபிஎம் கல்லூரி அருகே 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசாரும் தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். சடலமாக கிடந்த பெண் யார்? பாலியல் கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த வாரம் அன்னூர் சாலையில் சாக்கு மூட்டையில் இளம் பெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், மீண்டும் கோவையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

