மாணவிகளை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் செய்த கொடுமை

 
மாணவிகளை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் செய்த கொடுமை

திருவாரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் 

rape

திருவாரூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சீனிவாசன்(51) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரண்யா என்பவர் விசாரணை மேற்கொண்டு புகார் அளித்ததன் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சத்தியா தலைமையில் போக்ஸோ ஆக்ட் பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சீனிவாசனை கைது செய்து நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர். 

கடந்த ஆண்டு பாலியல் தொல்லை தரப்பட்ட சம்பவத்திற்கு ஆறு மாதத்திற்கு பிறகு வழக்கு பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியது.