காசநோய்க்கு பயந்து உறவை துண்டித்த காதலி! கட்டையால் அடித்துக்கொன்ற காதலன்

 
se

 கள்ளக்காதலனுக்கு காசநோய் வந்து விட்டதால் அவருடன் உறவு கொள்ள பயந்து கள்ள உறவை துண்டித்திருக்கிறார்.  இதில் ஆத்திரமடைந்த காதலன் கட்டையால் அடித்து பெண்ணை கொலை செய்திருக்கிறார் .

தேனி மாவட்டத்தில் டி கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்.  கூலித்தொழிலாளியான இவரின்  மனைவி செல்வி.   45 வயதான அவர் நேற்று முன்தினம் புல் அறுப்பதற்காக வடபுதுப்பட்டி அழகர் கோயில் கருட பகுதிக்குச் சென்றிருக்கிறார்.   காலையில் புல்லறுக்க சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை . 

ஹ்

இதனால் அல்லிநகரம் போலீசில் சென்று உறவினர்கள் புகார் அளிக்க,  போலீசார் தேடி வந்த போது புல் அறுக்கும் இடத்தில் தலையில் வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்திருக்கிறார் செல்வி.   அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,  கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

 அப்போதுதான் செல்விக்கும் சருத்துப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த இருளப்பன் என்கிற 60 வயது முதியவருக்கும் கள்ள உறவு இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே நான்கு ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது.  இதன் பின்னர் போலீசார் இருளப்பனை பிடித்து விசாரித்துள்ளனர்.  அப்போதுதான் தனக்கு காச நோய் பாதிப்பு வந்து விட்டதால் தன்னுடன் பேசுவதை செல்வி மறுத்துவிட்டார் . தன்னுடன் பழகுவதையும் நிறுத்திக் கொண்டு விட்டார் . இதனால் ஆத்திரம் அடைந்து கட்டையால் அடித்து அவரை கொலை செய்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார் . 

இருளப்பன் அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.