"பேஷண்ட் யாரும் வரல ,நீ உள்ள வரியா" -ஒரு டாக்டரால் ஒரு மாணவிக்கு ஹாஸ்ப்பிட்டலில் நேர்ந்த கொடுமை

 
doctor


11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபல மருத்துவமனையின் மருத்துவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Healthcare worker giving support and love to a patient Close up of a doctor hand with blue glove giving support and love to a patient at hospital. Coronavirus pandemic concept. doctor stock pictures, royalty-free photos & images


தமிழகத்தின் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் உள்ள வடக்கு பிரதட்சணம் சாலையில்  ஒரு பிரபல மருத்துவமனை இயங்கி வருகிறது  . இங்கு பல டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .மேலும் இங்கு 34 வயதான பெண்ணொருவரும் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரது 17 வயது மகள் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த பெண் அடிக்கடி அந்த தாயாரை பார்க்க அந்த ஹாஸ்ப்பிடாலுக்கு வருவார் .அப்போது அந்த ஹாஸ்ப்பிட்டலுக்குள் டாக்டராக வேலை செய்யும் டாக்டர் ரஜினிகாந்த் என்பவர் அந்த பெண்ணை நோட்டமிட்டு வந்துள்ளார் .மேலும் அந்த டாக்டர் அந்த 11ம் வகுப்பில் படிக்கும் மாணவியை பேஷண்ட் ரூமில் வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளார் .

இந்நிலையில் கேஷியராக பணியாற்றும் அந்த பெண்ணின் தாயார்  நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை  அளித்துள்ளார். அப்புகாரில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த்,  தனது 17 வயது மகளை டாக்டரது அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் .இப்போது அந்த டாக்டர் தலைமறைவாகி விட்டதால் அவரை தேடி வருகின்றனர் .