"மார்க் எடுக்க வைக்கிறேன்னு வாந்தி எடுக்க வச்சி.. "-டுடோரியல் ப்ரின்ஸ்பாலால் மாணவிக்கு நேர்ந்த கதி

 
rpp

பயிற்சிக்கு வந்த 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டுடோரியல் கல்லூரி பிரின்சிபாலை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர் 

Portrait of a woman. Violence against women or mental health issue concept. Black and white portrait of a woman hiding her face with hands. Stop violence against woman or mental health concept. Studio shot. rapes stock pictures, royalty-free photos & images
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அந்தியூரிலுள்ள  வனத்துறை அலுவலகம் எதிரே தனியார்  டுடோரியல் கல்லூரி நடத்தி வந்தவர் 38 வயதான லோகநாதன் . இவரே அந்த கல்லூரியின் ப்ரின்சிபாலாக இருந்து பல மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுத்து வந்தார் .அதனால் அவரிடம் ஏராளமான மாணவியர் அதிக மார்க் எடுக்கலாம் என்ற நம்பிக்கையில் படிக்க படையெடுத்து வந்தனர் 
இவரிடம் 10ம் வகுப்பு தனித்தேர்வு பயிற்சிக்கு வந்த 17 வயது மாணவி ஒருவர் அதிக மார்க் எடுக்கலாம் என்று பயிற்சிக்கு வந்தார் .அப்போது அந்த லோகநாதன் அந்த மாணவியிடம் அதிக மார்க் எடுக்க வைக்கிறேன் என்று கூறி அடிக்கடி யாரும் இல்லாத நேரத்திலெல்லாம் வர சொல்வார் .அந்த மாணவியும் அதிக மார்க் எடுக்கலாம் என்று அந்த லோகநாதன் கூப்பிட்ட போதெல்லாம் வந்தார் 
அப்போது அவர் அந்த  மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இதில், அந்த மாணவி கர்ப்பமானார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியான மாணவியின் பெற்றோர், கொடுத்த புகாரின் பேரில் பவானி அனைத்து மகளிர் போலீசார், கடந்த டிசம்பர் 4ம் தேதி லோகநாதனை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.