"பண்ணைக்கு வந்த பதினாலு வயசு பெண்ணை .."பரிசோதித்த டாக்டரால் வெளிவந்த உண்மை

 
women Rape


பண்ணையில் வேலை பார்க்கும் தொழிலாளியின் மகளை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார் .

Girl raped in Gujarat [Representative image]
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பந்தவாடா கிராமத்தில் பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரராக ஒரு பண்ணையார் இருந்தார் .அவரின் பண்ணையில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர் .இந்நிலையில் அந்த பண்ணையாருக்கு சுரேஷ் படேல் என்ற 21 வயதான மகன் இருந்தார் .அந்த மகன் அடிக்கடி அந்த பண்ணைக்கு தங்களின் நிலத்தில் நடக்கும் விவசாய வேலைகளை கவனிக்க வருவார் .அப்போது அவரின் நிலத்தில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியின் 14 வயதுடைய டீனேஜ் பெண்ணை அவர் பார்த்தார் .அதனால் அந்த பெண்ணை அடைய அவர் திட்டம் தீட்டினார் .
அதன் படி அவர் அந்த பண்ணயில் யாருமில்லாத நேரத்தில் தனியாக இருந்த அந்த 14 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ,பலாத்காரம் செய்துவிட்டார் .மேலும் இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி சென்று விட்டார் .அந்த பெண்ணும் வெளியே சொல்லாமல் இருந்தார் .ஆனால் அந்த பெண்ணுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதும் ,டாக்டரிடம்  கூட்டி சென்றனர் .அப்போது அந்த டாக்டர் அந்த பெண்ணிடம் விசாரித்த போது ,தனக்கு பண்ணையாரின் மகனால் நடந்த கொடுமையை கூறினார் .பின்னர் அந்த பெண்ணின் தாய்க்கும் விஷயம் தெரிந்தது .அதன் பிறகு அவர் போலீசில் புகார் அளித்ததும் அந்த பண்ணையாரின் மகன் கைது செய்யப்பட்டார் .