"அப்பாவி பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு அப்பா யார்? "-வாலிபர்களால் 14 வயது பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

 
gang rape gang rape

14 வயது சிறுமி கர்ப்பம் ஆன வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது சிறுமி கர்ப்பம்; 'போக்சோ'வில் இருவர் கைது
தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த ரத்தினவேல் என்ற  வாலிபர்  மற்றும் துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்த பாபு என்ற வாலிபரும்  மற்றும் ஒரு 16 வயதான சிறுவனும் முசிறியில் தந்தையை இழந்த 14 வயதான சிறுமியிடம் தகாத முறையில் அடிக்கடி நடந்து கொண்டனர் .இதனால்  அந்த சிறுமி ஏழு மாதம் கப்பமானார் .
அதனால் அந்த பகுதி மக்கள் இதுபற்றி சமூக பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் கூறினர் .அதன்பேரில் சிறுமியின் இருப்பிடத்திற்கு சென்ற மகளிர் போலீசார் மற்றும் சமூக நல பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியின் தாய் மற்றும் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த மூவரும் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து வாலிபர் ரத்தினவேல் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். இப்போது கர்ப்பிணியாக இருக்கும் சிறுமி முசிறி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேற்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இதனால் அந்த பிறக்க போகும் குழந்தைக்கு தந்தை யார் என கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும் என்று பொது மக்கள் கூறுகின்றனர்