"பூச்சி மருந்தை கொண்டு பெண்ணை.. "-ஒரு வாலிபரால் 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.

 
women Rape

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை  பூச்சி மருந்து கொடுத்து கொல்ல முயன்று ,தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது .

Assaulted by husband, woman ends life along with 4 children [Representative image]

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தை சேர்ந்த 20 வயதான   வேல்முருகன் , 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலித்து வந்தார் .ஆனால் அந்த பெண் அவரை காதலிக்கவில்லை .இதனால் அந்த வாலிபர் அந்த பெண்னின் வீட்டுக்கு பூச்சி மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு சென்றார் .பின்னர் அந்த வீட்டினுள் சென்று அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு சண்டை போட்டார் .ஆனால் அவர் அதற்கு மருத்ததும்  கோபமான  அந்த வாலிபர் , அந்த பெண்ணின் வாயில்  பூச்சி மருந்தை ஊற்றினார் .பிறகு தானும் மீதி மருந்தை  குடித்து ,தனது கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்  .இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த இருவரையும்  அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர் .
அங்கு இருவருக்கும் தீவிர  சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .இந்த  சம்பவம் பற்றி தகவறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்