"ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்ணை அழைத்து சென்று ..." டீனேஜ் பெண்ணுக்கு நடந்த கொடுமை

 
rape


ஹாஸ்ப்பிட்டலுக்கு தாயாருக்கு சிகிச்சையளிக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸ் தேடி வருகிறது 

Mumbai Crime: 17-year-old girl molested at KEM Hospital
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பொய்வடா பகுதியில் கேஇஎம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது .அந்த ஹாஸ்ப்பிட்டலில் ஒரு 17 வயதான பெண் கடந்த வெள்ளிக்கிழமை தனது தாயாரை அழைத்து கொண்டு டயாலிசிஸிஸ் சிகிச்சைக்கு போனார் .அப்போது அந்த தாயாருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது ,அங்கு ஒரு நபர் அந்த 17 வயதான பெண்ணிடம் வந்து ,தான் ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பணம் கொடுக்கும் திட்ட குழுவிலிருந்து வருவதாகவும் ,அந்த பெண்ணின் தாயாரின் சிகிச்சை செலவுக்கு பணம்  வாங்கி கொடுப்பதாகவும் கூறி,தன்னோடு வருமாறு கூப்பிட்டார் .
அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவருடன் சென்றார் .அப்போது  அந்த நபர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் அங்கிருந்து தப்பியோடி வந்து விட்டார் .இந்த கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத அந்த நபர் மீது போய்வாடா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் போலீசார் அந்த நபரை தேடி கண்டுபிடிக்க அவரின் போட்டோ மூலம் முயன்று வருகின்றனர் .