கூடப்பிறந்த அண்ணனால் சிறுமி 5 மாத கர்ப்பம் - கருணை காட்டிய நீதிபதி

 
d

கூடப்பிறந்த அண்ணனால் கருவுற்ற 15வயது சிறுமி 5 மாத சிசுவை அழித்துவிட நினைத்தபோது மருத்துவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, பிற்காலத்தில் சமூகப் பிரச்சனை மற்றும் உளவியல் பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டும் என்று வாதிட்டதை அடுத்து நீதிபதி அந்த கருவை கலைக்க அனுமதி அளித்திருக்கிறார்.

 கேரள மாநிலத்தில் 15 வயதான அந்த சிறுமியை அவருடன் கூட பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் . இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்து இருக்கிறார். அந்த சிறுமியின் வயிற்றில் ஐந்து மாத சிசு இருப்பதை அறிந்த உறவினர்கள் அந்த சிறுமி குழந்தை பெற்றால் எதிர்காலத்தில் அவர் மட்டுமல்லாத குடும்பமும் உளவியல் பிரச்சனைக்கு ஆளாகும்.  சமூகத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும்.  இதனால் உருவாகும் உறவு முறையில் பல கேள்விகள் எழும் என்று அந்த சிசுவை அளிக்க முடிவு செய்து மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள்.  

x

 ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள்,  சிறுமியின்  வயிற்றும் வளரும் சிசு 32 வாரங்களை கடந்து விட்டதால்.  அதை அழிக்கும் உரிமை தங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டனர்.  இதனால் சிறுமி நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜியாத் ரகுமான்,  கூட பிறந்த சகோதரனின் கருவை சுமந்து கொண்டிருக்கிறார் 15 வயது சிறுமி. 

 அந்த கரு முழுவதுமாக வளர்ந்து குழந்தை பெற்றுவிட்டால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு அந்த சிறுமி ஆளாக வேண்டியது வரும்.  உளவியல் பிரச்சனைகளுக்கும் அந்த சிறுமி ஆளாகி விடுவார், இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அந்த சிறுமியின் வயிற்றில் வளரும் 32 வாரங்களைக் கடந்த கருவை மருத்துவ அடிப்படையில் உடனடியாக கலைக்க அனுமதி அளித்திருக்கிறார்.   மேலும்,  வலப்புரம் மாவட்ட மருத்துவ அலுவலர் காவல் துறை கண்காணிப்பாளர் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியோருக்கும் இந்த சிறுமியின் வயிற்றில் வளரும் கருக்கலைப்பு குறித்து கண்காணிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.