குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வாயை பொத்தி கூட்டு பலாத்கார முயற்சி - ஐந்து பேர் தப்பினர்

 
h

 அதிகாலையில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் முயன்றுள்ளனர் ஐந்து பேர்.  அந்த ஐந்து பேரும் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்கள்.  இளம் பெண் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பித்து வாசலுக்கு ஓடி  சத்தம் போட்டதால் தப்பித்து இருக்கிறார்.  முகமூடி அணிந்து ஐந்து பேரும் பைக்கில் தப்பி இருக்கிறார்கள்.  நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

நாமக்கல் மாவட்டத்தில் சுல்தான் பேட்டையில் வசித்து வருகிறார் அந்த இளம் பெண்.  வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.  இவரின் கணவர் லாரி டிரைவராக இருப்பதால் வெளி மாநிலத்திற்கு சரக்கு ஏற்றி சென்றிருக்கிறார்.  பெண் குழந்தையுடன் அந்த இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

s

 இதை சிலர் நோட்டமிட்டு இருக்கிறார்கள்.  அதிகாலையில் அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று முகமூடி அணிந்த ஐந்து பேர் அந்த பெண்ணின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.   அவர்களின் பிடியிலிருந்து அந்த இளம் பெண் தப்பித்து வாசலுக்கு ஓடிவந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டு இருக்கிறார்.

 அதிகாலையில் இளம்பெண் போட்ட அந்த சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் எழுந்து ஓடி வந்திருக்கிறார்கள்.   இதை கண்டதும் முகமூடி அணிந்திருந்த அந்த மர்ம நபர்கள் 5 பேரும் தாங்கள் வந்த பைக்கில் ஏறி தப்பி இருக்கிறார்கள்.  பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை அப்பகுதியினர் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.   போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 கணவர் வெளியூர் வேலைக்கு சென்று இருப்பதையும் அந்த இளம் பெண் தனியாக இருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டு தான் அந்த மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.   இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.