14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

 
Rape

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த வழக்கில் 4 இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ54 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

சிறப்பு நீதிமன்றம் சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகம்பட்டி அரியபட்டி கிராமம் உள்ளது  இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வக்குமார், சிவக்குமார், பொன்னுச்சாமி, செந்தில்குமார், சிவா, செல்வம். இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கு சிவகங்கையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் செல்வக்குமார், சிவக்குமார், பொன்னுச்சாமி, செந்தில்குமார் ஆகியோர் மீதான குற்றம் நிறுபிக்கப்பட்ட நிலையில் நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டு சிறைதண்டனையும் ரூ54 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பை நீதிபதி சரத்ராஜ் வழங்கினார்.

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு!

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகளிடம். விதிக்கப்பட்ட அபராதம் ரூ54 ஆயிரம் பணத்துடன் அரசு இழப்பீடு தொகை ரூ 6 லட்சத்தையும் சேர்த்து ரூ 6.54 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கவும் உத்தரவிட்டார். போக்சோ வழக்கில் 4 இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைவிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் சிவா, செல்வம் ஆகியோர் மீதான குற்றம் நிறுபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.