இருவரை காதலித்ததால் விபரீதம்... 2 காதலன்களும் சேர்ந்து சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம்

 
ச்

அசாமில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். 

Image


ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாட்டியின் இறுதி சடங்குகளுக்கு சென்றுவிட்டு தாயும் இளம் சகோதரரும் வீடு திரும்பியபோது 16 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். அந்தச் சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது சகோதரர் அசாம் மாநிலத்திற்கு வெளியே பணிபுரிகிறார். சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயும் சகோதரரும் வெளியூர் சென்றிருப்பதாக தனது காதலனிடம் கூறியுள்ளார். சிறுமி தனியாக இருப்பதை அறிந்த அவன், தனது இரண்டு நண்பர்களுடன் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளான். இதனிடையே சிறுமி காதலனுக்கு தெரியாமல் வேறு ஒரு இளைஞரிடமும் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இருவரையும் காதலிப்பதாக சிறுமி கூறியதாக கூறப்படுகிறது. 

இதனால் சிறுமியை பழிவாங்க 2 இளைஞர்களும் ஒன்று சேர்ந்ததாக கூறப்படுகிறது. காதலன் சிறுமியின் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில், சிறுமி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மற்றொரு ஆண் நண்பரும், அவரது நண்பரும் சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். 2 காதலன்கள் உட்பட மொத்தம் 5 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் செங்கலை எடுத்து சிறுமியின் தலையில் போட்டு கொலை செய்ததுடன், அவரது அந்தரங்க உறுப்புகளில் பருப்பு கடைய பயன்படுத்தப்படும் மத்து போன்ற பொருளை சொருகி இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஒரு பள்ளி மாணவி என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மின்சார ஆட்டோ மற்றும் ரிக்‌ஷா ஓட்டுநர்களாகப் பணிபுரிந்தவர்கள் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.