"ஐயோ! ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணோடவா.. "-அதிர்ச்சியான தாய் -அடுத்து என்னாச்சி தெரியுமா?

 
lespian

 

ஆண்களை திருமணம் செய்து கொள்வதை விரும்பாத இரு பெண் டாக்டர்கள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து ,விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர் . 

Girlfriends relaxing. Girlfriends laying on colorful sofa in modern apartment. Girl holding each other's hand and enjoying togetherness. Concept LGBT couple at home. lesbian stock pictures, royalty-free photos & images
மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பெண்கள் 25 வயதான பரோமிதா முகர்ஜி மற்றும் 26 வயதான  சுரபி மித்ரா.டாக்டர்களான இருவரும் அங்கு சொந்தமாக க்ளினிக் நடத்தி மருத்துவராக பணியாற்றி வருகின்றனர் .இருவருக்கும் ஆண்களை பிடிக்கவில்லை .அதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்தனர் .அப்போது அவர்கள் இருவருமே தாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இது பற்றி தங்களின் பெற்றோரின் சம்மதம் வேண்டி பேசினர் .
அப்போது முகர்ஜி ,ஒரு பெண்ணான தான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியதும் அதை கேட்ட அந்த தாய் அதிர்ச்சியில் மயங்கினார் .பின்னர் அந்த பெண் தன் தந்தையிடம் இது பற்றி கூறி சம்மதம் வாங்கினார் .அடுத்து சுரபி இது பற்றி தன் பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இவர்களின் ஓரின திருமணத்திற்கு சம்மதம் கூறி விட்டனர் .பின்னர் அந்த இரு பெண் டாக்டர்களும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டு ,விரைவில் கோவாவில் திருமணம் செய்யவிருக்கின்றனர்