“குடும்பத்தோட பெயரை கெடுத்திட்டியே”- மகளை ஆணவக்கொலை செய்த தந்தை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உடன்பிறந்த தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தந்தை கைது செய்யப்பட்டனர்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, தனது ஆண் நண்பருடன் இருந்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சர்கேஜைச் சேர்ந்த 22 வயதான சோபியா ஃபாரூக் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய அவரது அண்ணன் 38 வயதான ஹபில் ஃபாரூக் மற்றும் தந்தை 56 வயதான முகமது ஃபாரூக் நவாப்கான் கைது செய்யப்பட்டுள்ளனர். சோபியாவை சர்கேஜில் உள்ள கெல்ஜிபுரா அருகே ஒரு தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று, சுத்தியலால் தாக்கி, பின்னர் இந்தக் கொலையை ஒரு சாலை விபத்துபோன்று சித்தரித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சோபியா ஜுஹாபுராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்தார்.
சோபியா மற்றும் ஒரு இளைஞர் சம்பந்தப்பட்ட காணொளி சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு வைரலானது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு அவளுடைய தந்தையும் சகோதரரும் அவளைக் கண்டித்ததோடு, மற்ற நண்பர்களுடன் அவள் தொடர்ந்து பேசுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் சோபியா மீது கடுங்கோபத்தில் இருந்தனர். தங்கள் சமூகத்தில் குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற விரும்புவதாகக் கூறி, அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

