மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்! வெளியான அதிர்ச்சி காரணம்

 
murder

தூத்துக்குடி அருகே  மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காததால் ஆத்திரத்தில் மாமனாரை கம்பாள் தலையில் அடித்து கொன்ற மருமகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை திரவியபுரம் பகுதியை சேர்ந்தவர் இருதய மணி , இருதயமணியின் மகளுக்கும் தூத்துக்குடி சின்ன கண்னுபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது ஆனந்த் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருதயமணியின் மகள் கணவன் ஆனந்தை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக தந்தை இருதயமணியின் வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டைக்கு சென்ற ஆனந்த் தனது மாமனார் இருதய மணியுடன் தனது மனைவியை வீட்டிற்கு கண்ணுடன் அனுப்பி வைக்க சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார் இதில் மாமனார் இருதய மணி தனது மகளை அனுப்பி வைக்க மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காத ஆத்திரத்தில் இருதயமணியை அங்கே இருந்த கம்பால் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக ஆனந்த் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாமனார் இருதய மணி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மருமகன் ஆனந்த் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர் இருதய மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தப்பி ஓடிய குற்றவாளி ஆனந்தை தேடி வருகின்றனர்.