மகள் உறவு முறை கொண்ட பெண்ணை சித்தப்பாவே கற்பழிக்க முயற்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உறவுப் பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள தெப்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் வயது (35). திருமணமான இவர் அதே கிராமத்தில் மல்லிகைப் பூ விவசாயம் செய்து வருகிறார். கிருஷ்ணன் தனது தோட்டத்திற்கு தினசரி பூ பறிப்பதற்கு தோட்ட வேலைக்கு வந்த தனது உறவுக்காற பெண்ணை அழைத்து, போதையில் வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டு கத்தியதால் அங்கிருந்து கிருஷ்ணன் செல்போனை தவற விட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணையில் தெப்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனை கைது செய்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கிருஷ்ணன் சித்தப்பா முறை என்பது தெரிய வந்தது. மதுபோதையில் கற்பழிக்க முயற்சித்தது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து கிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.