தனது பெண்ணை காதலித்த இளைஞரை கொடூரமாக கொன்ற தந்தை
ஆரணி அருகே மைனர் பெண் காதல் விவகாரத்தில் வாலிபரை பெண்ணின் தந்தை கட்டையால் கடுமையாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முக்குரும்பை ஊராட்சிக்குபட்ட அனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ரவி- சின்னபாப்பா தம்பதியினருக்கு வடிவேல் என்ற மகனும், சிவசக்தி மீனா என்ற 2 மகளும் உள்ளனர். மேலும் வடிவேல் என்பவர் ஆரணியில் கூரியரில் டெலிவரி ஊழியராக பணியாற்றி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போளுர் தாலுக்கா லாடவரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்பிரியா என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ஆரணி நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு தொடுத்து நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து அனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் முக்குரும்பை கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மைனர் பெண் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளன. இதனை மைனர் பெண்ணின் தந்தை சங்கர் இருதரப்பையும் கண்டித்துள்ளதாகவும் வடிவேலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்க முயன்று தப்பியோடியுள்ளார். இந்நிலையில் இன்று முக்குறும்பை கிராமத்தில் இறந்தவரின் சாவுக்கு அனந்புரம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் வந்துள்ளார். இதனை கண்ட சங்கர் மற்றும் உறவினர்கள் கட்டையால் மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த வடிவேல் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். மைனர் பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த வடிவேலின் உறவினர்கள் வடிவேலை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் வரும் வழியில் வடிவேல் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் இறந்த வடிவேலின் உறவினர்கள் திருவண்ணாமலை ஆரணி நெடுஞ்சாலை களம்பூர் கூட்ரோடில் திடிரென சாலைமறியிலில் ஈடுபட்டு தரையில் உருண்டு கதறி அழுதனர்.
சும்பவடத்திற்கு ஆரணி டி.எஸ்.பி சுரேஷ் சண்முகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் இறந்த வடிவேலின் உறவினர்கள் கலைந்து சென்றனர். தற்போது மைனர் பெண்ணின் தந்தை சங்கர் என்பவரை களம்பூர் போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி அருகே மைனர் பெண்ணை காதலித்ததாக பெண்ணின் தந்தை வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இறந்த வடிவேலின் சடத்தை ஆரணி அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்தனர். ஆரணி அரசு மருத்துவமனை பிணைவறையில் ஏற்கனவே விபத்து சம்மந்தமாக 2உடல்கள் இருப்பதால் போதிய இடவசதியில்லை என்று ஆரணி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் சடலத்தை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வைத்துள்ள சம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


