நெல்லை அருகே பட்டப்பகலில் தந்தை, குழந்தை வெட்டிக்கொலை

 
ச்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் அவருடைய 5 வயது மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மூலச்சி பகுதியில் ஒருவர் துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். காளிமுத்து என்பவர் தனது மகன்கள் சின்னராஜ் (12), ஜெயராஜ் (5) ஆகியோருடன் நெல்லிக்காய் பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காளிமுத்துவின் வாகனம் மீது காரால் மோதி கீழே தள்ளிய கும்பல், அவர்களை வெட்டியது. இதில்  காளிமுத்துவின் தலையை மட்டும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. 5 வயது மகன் உயிரிழந்தார். மேலும், மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்க நடந்த கொலை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமாள் பாண்டியன் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் காளிமுத்து. பின் காளிமுத்துவின் தலையை அறுத்து எடுத்துச் சென்ற கும்பல் மூலச்சி ஊருக்குள் வைத்துச் சென்றது. கொடூர கொலை கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.