தந்தை வாங்கிய கடனுக்காக மகளை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

 
rape

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் அவரது மகளை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 17 வயது சிறுமி 9 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மட்டுமின்றி, அந்நிகழ்வை வீடியோவாக எடுத்து மிரட்டி, தொடர்ச்சியாக 5 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு அந்த இளம்பெண் ஆளாகி வந்துள்ளார். இதேபோல், திண்டுக்கல் அருகே சகோதரிகள் இருவர் கத்தி முனையில் கடத்திச் செல்லப்பட்டு 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். 

இப்படியாக தமிழகத்தில் சமீப காலமாக கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்த அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் அவரது மகளை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயது பெண்ணை கடத்தி வக்கில் மணி உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்புவதாக மிரட்டியதாகவும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.